×

உள்ளாட்சி தேர்தலில் 90.85% இடங்களை கைப்பற்றியது திமுக

 

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 90.85% இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களில் (மொத்த இடங்கள் 153) 90.85 சதவீத இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது. 5.25 சதவீத இடங்களை இந்திய தேசிய காங்கிரசும், அதிமுக  1.31 சதவீத இடங்களையும், மற்றவை 1.96 சதவீத இடங்களையும் பெற்றுள்ளனர். அதேநேரம் இன்னும் 0.65 சதவீத இடங்களின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

மொத்தமுள்ள ஒன்றியக் கவுன்சிலர் தேர்தலில் திமுக - 68.54% இடங்களை கைப்பற்றியுள்ளது. அதிமுக - 14.92% இடங்களையும், இ.தே.காங் - 1.42% இடங்களையும் கைபற்றியுள்ளது. சிபிஐ - 0.21%, சிபிஎம் - 0.26%, பாஜக - 0.56%, மற்றவை - 12.46% என சதவீத அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் 0.56 சதவீத இடங்களுக்கான முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.