☰
×

2027 அரசு விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு..! பொங்கல் தீபாவளிக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா..?

 

2027- ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் அடங்கிய பட்டியலை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர்.சாய்குமார் வெளியிட்டுள்ளார். 2027- ஆம் ஆண்டில் மொத்தம் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஜனவரி 15 முதல் 17 வரை பொங்கல் பண்டிகை விடுமுறை, மார்ச் 10-ல் ரம்ஜான், அக்டோபர் 28-ல் தீபாவளி பண்டிகை, டிசம்பர் 25-ல் கிறிஸ்துமஸ் என 2027-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக புதிய வருடம் பிறக்கும் போது காலண்டரில் பலரும் விடுமுறை தினங்களைத் தான் முதலில் பார்ப்பார்கள். விடுமுறை தினங்களை பார்ப்பது கூட ஒருவிதமான மகிழ்ச்சியைக் கொடுக்கும். அவ்வகையில் தமிழக அரசு 2027 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை தினங்களை வெளியிட்டிருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு விடுமுறைப் பட்டியல் 2027:

1. ஆங்கிலப் புத்தாண்டு - 01.01.2027 - வெள்ளிக்கிழமை

2. பொங்கல் - 15.01.2027 - வெள்ளிக்கிழமை

3. திருவள்ளுவர் நாள் - 16.01.2027 - சனிக்கிழமை

4. உழவர் திருநாள் - 17.01.2027 - ஞாயிற்றுக்கிழமை

5. தைப்பூசம் - 22.01.2027 - வெள்ளிக்கிழமை

6. குடியரசு நாள் - 26.01.2027 - செவ்வாய்க்கிழமை

7. ரம்ஜான் - 10.03.2027 - புதன்கிழமை

8. புனித வெள்ளி - 26.03.2027 - வெள்ளிக்கிழமை

9. வங்கிக் கணக்கு முடிவு நாள் - 01.04.2027 - வியாழக்கிழமை

10. தெலுங்கு வருடப் பிறப்பு - 07.04.2027 - புதன்கிழமை

11. தமிழ்ப் புத்தாண்டு 14.04.2027 - புதன்கிழமை

12. மகாவீர் ஜெயந்தி - 19.04.2027 - திங்கட்கிழமை

13. மே நாள் - 01.05.2027 - சனிக்கிழமை

14. பக்ரீத் (Idul Zuha) - 17.05.2027 - திங்கட்கிழமை

15. மொஹரம் - 15.06.2027 - செவ்வாய்க்கிழமை

16. சுதந்திர நாள்/மிலாதுன் நபி - 15.08.2027 - ஞாயிற்றுக்கிழமை

17. கிருஷ்ண ஜெயந்தி - 25.08.2027 - புதன்கிழமை

18. விநாயகர் சதுர்த்தி - 04.09.2027 - சனிக்கிழமை

19. காந்தி ஜெயந்தி - 02.10.2027 - சனிக்கிழமை

20. ஆயுத பூஜை - 08.10.2027 - வெள்ளிக்கிழமை

21. விஜயதசமி - 09.10.2027 - சனிக்கிழமை

22. தீபாவளி - 28.10.2027 - வியாழக்கிழமை

23. கிறிஸ்துமஸ் - 25.12.2027 - சனிக்கிழமை

2027- ஆம் ஆண்டின் 23 அரசு பொது விடுமுறை நாட்களில் ஆறு நாட்கள் ஞாயிற்றுக்கிழமையும், இரண்டு நாட்கள் சனிக்கிழமையிலும் வருகின்றன. ஐந்து நாட்கள் வெள்ளிக்கிழமையிலும், இரண்டு நாட்கள் வியாழக்கிழமையும், நான்கு நாட்கள் புதன்கிழமையும், இரண்டு நாட்கள் திங்கட்கிழமையும், இரண்டு நாட்கள் செவ்வாய்க்கிழமையும் வருகின்றது.

2027- ஆம் ஆண்டின் அரசு விடுமுறை நாட்களில் சனிக்கிழமைகளில் திருவள்ளுவர் நாள், மே நாள், விநாயகர் சதுர்த்தி, காந்தி ஜெயந்தி, விஜயதசமி, கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகைகள் வருகின்றன.

2027-ல் ஜனவரி 15- ஆம் தேதி வெள்ளிக்கிழமை பொங்கல் பண்டிகையும், ஜனவரி 16- ஆம் தேதி சனிக்கிழமை திருவள்ளுவர் நாளும், ஜனவரி 17- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உழவர் திருநாளும் கொண்டாடப்படவுள்ளது. முன்னதாக, 2027 ஆங்கில புத்தாண்டு வெள்ளிக்கிழமை வரவுள்ளதால் சனிக்கிழமை விடுமுறை எடுத்தால் மூன்று நாட்களுக்கு விடுமுறை கிடைக்கும்.

2027- ஆம் ஆண்டில் அக்.28- ஆம் தேதி வியாழக்கிழமை அன்று தீபாவளி வருகின்றது. அடுத்த நாள் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டால் தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும். 2027-ல் ரம்ஜான் பண்டிகை முன்கூட்டியே வருகிறது. அதாவது, 2027-ல் மார்ச் 10- ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை சனிக்கிழமை வருவதால் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.