×

மது பிரியர்கள் ஷாக்..!! விரைவில் மதுபான பாட்டில்களின் மீது சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி விதிக்க முடிவு..!

 

 தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்டம் 2006-ல் ‘3-ஏ’ என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டு, ஒரு மதுபான பாட்டிலுக்கு அதிகபட்சமாக ரூ.20 வரை புதிய வரியை விதிக்கத் தமிழக அரசுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. வெவ்வேறு வகையான மதுபானங்கள் மற்றும் பாட்டில்களின் அளவுகளுக்கு ஏற்ப, வரியின் விகிதங்களை அரசு தனித்தனியாக நிர்ணயித்துக் கொள்ளலாம்.

இந்த விசேஷ வரி விதிப்பின் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாய்த்தொகை முழுவதும் குறிப்பிட்ட சமூக நலப் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் விற்கப்படும் மதுபான பாட்டில்களின் மீது சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி விதிப்பதற்காகத் தமிழக அரசு நிறைவேற்றிய புதிய சட்ட மசோதாவுக்குக் கவர்னர் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

காலி மதுபாட்டில்களைப் பாதுகாப்பாக அகற்றி மறுசுழற்சி செய்தல், மதுப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் அமைத்தல், அவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்குதல் மற்றும் மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொள்ளுதல் ஆகியவற்றுக்கு இத்தொகை செலவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது