×

மதுபிரியர்கள் ஷாக்..!! டாஸ்மாக் கடைகளில் இனி ரூ.500 மட்டுமே ரொக்கம் கொடுக்க முடியும்.! 

 

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் ரூ.500 வரை மட்டுமே ரொக்கமாகப் பெற முடியும் என்றும், அதற்கு மேல் டிஜிட்டல் முறையிலேயே பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றும் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பதைத் தடுக்கவும், சில்லறை தட்டுப்பாட்டுப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் விரைவில் அனைத்துக் கடைகளுக்கும் பிறப்பிக்கப்பட உள்ளன.

, டாஸ்மாக் போன்ற அரசு மதுபானக் கடைகளில் தினசரி சராசரியாக ரூ.150 கோடி வரையிலும், வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் அதைவிட அதிகமாகவும் விற்பனை உள்ள நிலையில், 80 சதவீதத்திற்கு மேல் ரொக்கப் பணமாகவே (Cash) வசூலிக்கப்படுகிறது.

அந்த பணத்தை பணியாளர்கள், கடைகளில் இருப்பு வைத்து, அடுத்த நாள் வங்கியில் செலுத்துகின்றனர். அவ்வாறு எடுத்துச் செல்லும் பணத்தை கொள்ளை அடிக்கும் சம்வங்களும் அடிக்கடி நடந்தேரி வருகிறது.

தற்போது, மது பிரியர்கள் தாங்கள் விரும்பும் மது வகைகளை, டாஸ்மாக் இணையதளத்தில் தேர்வு செய்து, அதன் வாயிலாகவே பணமும் செலுத்தி, அதற்கான குறியீட்டை கடைகளில் காட்டி, மது வகைகள் வாங்கலாம்.

இந்த முறையில் வாங்குவோருக்கு, மது பாட்டில்களை வழங்க தாமதம் செய்யப்படுவதாக புகார்கள் எழுகின்றன. இதற்கு, ரொக்க பணம் வசூலிக்க, பணியாளர்கள் ஆர்வம் காட்டுவதே முக்கிய காரணமாக இருப்பதாக, டாஸ்மாக் கண்டறிந்துள்ளது.

தற்போது பெரும்பாலான இடங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் (UPI, கார்டுகள்) ஊக்குவிக்கப்பட்டாலும், ரொக்கமாகப் பணம் வாங்குவதில் ஊழியர்கள் காட்டும் ஆர்வம் காரணமாகவே வாடிக்கையாளர்களுக்குப் பாட்டில்களை வழங்குவதில் தேவையற்ற காலதாமதம் மற்றும் புகார்கள் ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது.

எனவே, ரொக்க பணப் புழக்கத்தை குறைத்து, டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, கூறிய டாஸ்மாக் அதிகாரி ஒருவர், ‘கடைகளில் மது பாட்டிலை கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்கவும், சில்லரை தட்டுப்பாட்டு போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரிக்கப்பட உள்ளது.

இதற்காக, 500 ரூபாய் வரை மட்டுமே ரொக்க பணமாகவும், அதற்கு மேல் டிஜிட்டல் முறையில் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, விரைவில் கடைகளுக்கு அறிவுரைகள் வழங்கப்படும்’ என்றார்.