×

சிங்கப்பெண் அதிரடிப்படை- பிரத்யேக எண் அறிவிப்பு

 

சிங்கப்பெண் அதிரடிப் படை உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 


சிங்கப்பெண் அதிரடிப்படை `1091' என்ற இலவச பிரத்யேக எண்ணை வெளியிட்டது காவல்துறை. 24x7 பயிற்சி பெற்ற காவலர்களால் கண்காணிக்கப்பட்டு செயல்படும். 1091 என்ற உதவி எண், அவசர கால உதவி எண்ணான 112 உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் 1091 என்ற ஒரே உதவி எண் மூலம் நேரடியாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை தொடர்பு கொள்ளலாம். மாநில காவல் கட்டுப்பாட்டு அறையில் சிங்கப்பெண் படைக்காக கூடுதல் அழைப்பு ஏற்கும் வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. 

இம்மையம் 24 மணி நேரமும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் செயல்படும். பெண்கள், குழந்தைகள் எதிர்கொள்ளும் வன்முறை, குடும்ப வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், பின்தொடர்தல் தொந்தரவுகளுக்கும், மிரட்டல், உடனடி காவல் உதவி தேவைப்படும் சூழலுக்கும் தொடர்பு கொள்ளலாம்.