வீரமணி வழக்கில் தொடர்பு? அருண் ஐபிஎஸ்-க்கு சம்மன்
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கு தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி அருண் உள்ளிட்ட 7 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஜெம் வீரமணி மீது இதுவரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. இதில், 7 வழக்குகள் போக்சோ வழக்குகள் ஆகும். சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொழில் அதிபர் 'ஜெம்' வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், வீரமணியின் டிரைவர்கள் பாபு, பார்த்திபன், லாசர், உதவியாளர் கணேசன் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வீரமணி தொடர்பான வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்திவருகிறது.
இந்நிலையில் திடீர் திருப்பமாக, வீரமணி வழக்கில் முன்னாள் போலீஸ் கமிஷனர் அருண் உள்பட 7 அதிகாரிகள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்து தாக்கல் செய்யப்போகும் குற்றப்பத்திரிகையில் இவர்கள் பெயர் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் அருண், மத்திய குற்றப்பிரிவின் முன்னாள் கூடுதல் கமிஷனர் ராதிகா உள்ளிட்ட 7 போலீஸ் அதிகாரிகள் மீது 4 பிரிவுகளில் வழக்கு புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக ஐபிஎஸ் அதிகாரி அருண் உள்ளிட்ட 7 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.