×

நரசிம்மராவ் போல விஜய் மீதும் சி.பி.ஐ வழக்கு பதிய வாய்ப்பு : அ.தி.மு.க இன்பதுரை..! 

 

தமிழக முதலமைச்சர் விஜய் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளதாக அ.தி.மு.க வழக்கறிஞரும் எம்.பியுமான இன்பதுரை தெரிவித்துள்ளார். குதிரை பேரம் தொடர்பான விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் சிக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


இந்தக் கருத்திற்கு வரலாற்று ரீதியான காரணங்களை முன்வைத்த இன்பதுரை, 1993 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒரு முக்கிய சம்பவத்தை சுட்டிக்காட்டினார். அன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, ஜே.ஏ.எம் (JMM) எம்.பிக்களிடம் குதிரை பேரம் நடத்தி ஆதரவு திரட்டியதாக எழுந்த புகாரில், அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் மற்றும் பூஜா சிங் ஆகியோர் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்ததை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

அன்று எம்.பிக்களின் ஆதரவை குறுக்கு வழியில் பெற்றதற்காக எந்த மாதிரியான சட்ட நடவடிக்கைகள் பாய்ந்தனவோ, அதே பாணியில் தற்போதைய சூழலிலும் முதலமைச்சர் விஜய் மீது வழக்கு பதியப்படலாம் என்று அவர் கூறியுள்ளார். மத்தியில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்த இன்பதுரை, தமிழக வெற்றி கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் மீது இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது அரசியல் ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.