இந்தியாவின் 'கரப்பான் பூச்சி' கட்சி போல... வங்கதேசத்தில் உருவான 'பிராய்லர் சிக்கன்' கட்சி!
இந்தியாவில் இளைஞர்களுக்கு நிலவும் வேலைவாய்ப்பின்மை, சமூகப் பிரச்னைகளைக் கண்டித்து முன்னெடுக்கப்பட்ட இளைஞர்களின் இயக்கம்தான் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'.இந்தியாவில் இளைஞர்கள் இணைந்து 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' என்று தொடங்கியது போல, வங்கதேசத்தில் 'பிராய்லர் சிக்கன் கட்சி' என்ற பெயரில் இயக்கத்தைத் தொடங்கி மாணவர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
வங்கதேசத்தில் வெள்ள பாதிப்புகள் அதிகமாக இருந்தபோதிலும், மாணவர்களுக்கு வழக்கம்போல் தேர்வு நடத்தப்பட்டது. அதற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அப்போது வங்கதேச கல்வி அமைச்சர் எஹ்சானுல் ஹொக் மிலன், 'பலவீனமான பண்ணைக் கோழிகள்' என்று மாணவர்களை குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு மாணவர்களை விமர்சித்த கல்வி அமைச்சரை எதிர்த்து முகநூலில் 'பிராய்லர் சிக்கன் கட்சி' என்ற பக்கத்தை உருவாக்கி, அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று தீவிரமான போராட்டங்களை வங்கதேச மாணவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.