×

சென்னையில் பல இடங்களில் லேசான மழை!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. கடந்த நவம்பர் மாதத்தில், பருவமழை தீவிரமடைந்த நிலையில் அடுத்தடுத்து 2 புயல்கள் உருவாகி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் பல நாட்களுக்கு தேங்கியிருந்த மழை நீர், வடியாமலேயே இருந்தது. இதையடுத்து, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை மட்டும் பெய்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஜன.9 தேதி
 

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. கடந்த நவம்பர் மாதத்தில், பருவமழை தீவிரமடைந்த நிலையில் அடுத்தடுத்து 2 புயல்கள் உருவாகி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் பல நாட்களுக்கு தேங்கியிருந்த மழை நீர், வடியாமலேயே இருந்தது. இதையடுத்து, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை மட்டும் பெய்து வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஜன.9 தேதி வரை பருவமழை தொடரும் என அறிவித்திருந்த சென்னை வானிலை ஆய்வு மையம் ஜன.2ம் தேதி வரையில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. அதன் படி, இன்று காலை முதல் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளிலும் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர், ரத்தினமங்கலம், மேலகோட்டையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை பெய்து வருகிறது.