×

மதுக்கூடங்களுக்கான லைசன்ஸ் கட்டணம் உயர்கிறது!

 

 

புதுச்சேரியில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், மதுக்கூடங்களுக்கான லைசன்ஸ் கட்டணம் உயர்கிறது.


அண்மையில் புதுச்சேரியில் மதுபான விலை உயர்ந்தது.‌ சாதாரண குவார்ட்டர் மது பாட்டிலுக்கு ரூ.6 முதல் உயர் ரக பாட்டிலுக்கு ரூ.30 வரை விலை உயர்கிறது. 750 மிலி கொண்டு முழு பாட்டிலுக்கு ரூ.24 முதல் ரூ.120 வரை விலை உயர்கிறது. புதுச்சேரியில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், மதுக்கூடங்களுக்கான லைசன்ஸ் கட்டணம் உயர்கிறது. அதன்படி, 

⬆️ மொத்த கொள்முதல் கடைகளுக்கான ஆண்டு லைன்சன்ஸ் கட்டணம் ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்வு

⬆️ சில்லறைக் கடைகளுக்கான ஆண்டு லைன்சன்ஸ் கட்டணம் ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.14 லட்சமாக உயர்வு

⬆️ சுற்றுலா பிரிவின் கீழ் உணவகங்களில் செயல்படும் மதுக்கூடங்களுக்கான ஆண்டு லைசன்ஸ் கட்டணம் ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது

⬆️ கலால்துறை மூலம் ரூ.275 கோடி கூடுதல் வருவாய் ஈட்டுவதற்காக இத்தகைய கட்டண உயர்வு முடிவுகளை யூனியன் பிரதேச அரசு எடுத்துள்ளது