வீரத் தமிழச்சி வேலுநாச்சியாரை போற்றி மகிழ்வோம் - தினகரன் ட்வீட்
Updated: Jan 3, 2024, 13:58 IST
வீரத் தமிழச்சி வேலுநாச்சியாரை போற்றி மகிழ்வோம் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், இந்திய விடுதலைப்போர் வரலாற்றில் ஆங்கிலேயரை வீழ்த்தி சிவகங்கை கோட்டையை கைப்பற்றிய ஒரே பெண் அரசியான வேலுநாச்சியாரின் பிறந்த தினம் இன்று.
இளம் வயதில் மட்டுமல்ல தான் இறக்கும் வயதிலும் பயம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் அறியாத அளவிற்கு யாருக்கும் அஞ்சாத துணிவும் தைரியமும் நிறைந்த வீரத் தமிழச்சி வேலுநாச்சியாரை போற்றி மகிழ்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.