×

“எலும்பை உடைப்பாரம்.. இதெல்லாம் என்ன பேச்சு” - முதல்வர் விஜய்..!!

 

தமிழக சட்டமன்றப் பதிலுரையின் போது இன்று (செப்.7) எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்களின் பேச்சை சுட்டிக்காட்டிய CM விஜய், "சட்டசபைக்குள் வந்து எலும்பை உடைப்பேன் என ஓர் 'ஆர்த்தோ சர்ஜன்' போல பேசுவதா?" என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதுபோன்ற பொறுப்பற்ற மற்றும் நாகரிகமற்ற பேச்சுகளை தொடர்ந்து பேசியதால்தான் அவர்கள் தற்போது எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கிறார்கள் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், தனிப்பட்ட முறையில் யாரையும் தரம் தாழ்த்தி பேச வேண்டாம் என அவர் கூறினார்.

*ஒரு MLA எலும்பை உடைப்பேன் என்கிறார்; மக்களுக்கு நல்ல சாவே வராது என திமுகவை சேர்ந்த மூத்த உறுப்பினர் பேசுகிறார்..இதெல்லாம் என்ன பேச்சு; இப்படியெல்லாம் பேசி பேசித்தான் இன்று எதிர்வரிசையில் அமர்ந்துள்ளனர்...

மிசாவை பார்த்தவர்கள் என கூறுகின்றனர்; உங்கள் மிசா வரலாறு மக்களுக்கு தெரியும் -- பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரை

நாங்கள் மிசாவை பார்த்தோம், மிசாவை பார்த்தோம் என எதற்கெடுத்தாலும் அதை சொல்கின்றனர். 'பேசி பழகிய பொய், வாங்கிப் பழகிய கை, போட்டு பழகிய பை' என கவிஞர் கண்ணதாசன் திமுக குறித்து விமர்சித்திருந்தார். அதனை நான் தற்போது நினைவு கூற விரும்புகிறேன்.

லோனுக்கு இ.எம்.ஐ. வாங்குவது போல, இன்ஸ்டால்மெண்ட்-ல் கமிஷன் வாங்கியிருக்கிறார்கள். டெண்டரில் கட்டாயப்படுத்தி கமிஷன் வாங்கியதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும் விசாரணை கமிஷனில் தெளிவாக கூறப்பட்டுள்ளது

இங்குள்ள ஒரு உறுப்பினர், எலும்பை உடைப்பேன் என்று பேசுகிறார். அவர் என்ன ஆர்த்தோ டாக்டரா? திமுகவுக்கு ஒட்டு போடாதவர்களுக்கு நல்ல சாவு வராது என ஒருவர் பேசுகிறார். இப்படி பேசியதால் தான், இவர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கிறார் என அவர் கூறினார்.

என்னாது எலும்பை உடைப்பாரா? ஆர்த்தோ சர்ஜனா அவர்? தி.மு.கவினரின் அமளிகளுக்கு இடையே கேப் விடாமல் மார்க்கண்டேயனுக்கு ஆவேசமாக பதிலடி கொடுத்த முதலமைச்சர் விஜய்#CMVijay | #TVK | #TNAssembly | #AssemblySession | #PolimerNews | #EPS | #ADMK | #DMK | #UdhayanidhiStalin | #Speaker |… pic.twitter.com/1mi7sIwYdk

— Polimer News (@polimernews) September 7, 2026