×

ஓட்டுக்கு ரூ.25,000? பணத்தை வாரி இறைக்கும் லீமா ரோஸ்

 

திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் லீமா ரோஸ் தரப்பில்,  ஓட்டுக்கு ரூ.25,000 வழங்குவதற்கான டோக்கனுடன் ஆட்டோவில் 10 பேர் வந்ததாக கூறப்படுகிறது.

 


அதிமுகவில் சமீபத்தில் சேர்ந்த மார்ட்டின் மனைவி லீமா ரோஸ், திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரிடம் 139 கோடி ரூபாய் மதிப்புக்கு நகை உள்ளிட்ட சொத்துக்கள் இருப்பது வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் 909 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், கட்டிடங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்கள் உள்ளன.

தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின், திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.இந்நிலையில் லீமா ரோஸ் தரப்பில்,  ஓட்டுக்கு ரூ.25,000 வழங்குவதற்கான டோக்கனுடன் ஆட்டோவில் 10 பேர் வந்ததாக கூறப்படுகிறது. தவெகவினர் மற்றும் பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடிக்க முற்பட்ட போது தப்பி ஓடிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், “திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸை தங்களுக்கு யாரென்றே தெரியாது. வேறு ஒரு ஊரை சேர்ந்த லீமா ரோஸ் இங்கு ஏன் போட்டியிடுகிறார்? பணம், பரிசு பொருட்களை வாரி இறைத்து பண திமிரை காட்டுக்றார். வாகனத்தில் ஏ.சி.யில் அமர்ந்து கொண்டு பகட்டாக வந்து செல்கிறார்” எனக் கூறுகின்றனர்.