×

போலீசாருக்கு லீவ் கட்- டிஜிபி அதிரடி உத்தரவு

 

காவலர்கள் மே 2 முதல் விடுமுறை எடுக்கத் தடை விதித்துத் தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை 4 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை யாரும் விடுமுறை எடுக்கக்கூடாது என தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது விடுப்பில் உள்ள காவலர்களும்  2ஆம் தேதி முதல் விடுப்பை நீட்டிக்கக்கூடாது எனவும் மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, கல்வி விடுப்பு மற்றும் முறையான காரணங்களுக்காகப் பெறப்பட்ட மருத்துவ விடுப்பு ஆகியவற்றில் இருப்பவர்களுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த அறிவுறுத்தல், களப்பிரிவுகள் மற்றும் சிறப்புப் பிரிவுகளில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கும் பொருந்தும். பாதுகாப்புப் பணிகளை பலப்படுத்த தமிழக டிஜிபி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.