அதிமுகவிலிருந்து கூண்டோடு விலகி திமுகவில் இணைந்த வழக்கறிஞர்கள்
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் புதிதாக திமுகவில் இணைபவர்கள் மற்றும் ஏற்கனவே இணைந்தவர்கள் என 150 வழக்கறிஞர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்து பெற்று குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் புதிதாக திமுகவில் இணைபவர்கள் மற்றும் ஏற்கனவே இணைந்தவர்கள் என 150 வழக்கறிஞர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சுமார் 70 பேர் ஏற்கனவே அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர் அவர்களோடு,
புதிதாக திமுகவில் தங்களை இணைத்துக் கொள்ளும் வகையில் 80 வழக்கறிஞர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.இதனைத் தொடர்ந்து, திமுகவில் இணைந்த 150 வழக்கறிஞர்கள் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் உடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.