☰
×

“இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை” தொடக்கம்! 

 

திருநெல்வேலியில் நடிகை திரிஷா பெயரில் “இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை” தொடங்கபட்டுள்ளது. 

நடிகை திரிஷாவின் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து, ‘இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை’ என்ற பெயரில் திருநெல்வேலியில் புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளனர். நடிகை திரிஷாவிற்கு ஆதரவாகவும், அவரது பெயரில் நற்பணிகளை முன்னெடுக்கும் நோக்கிலும் இந்தப் பேரவை தொடங்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.  ராஜகோபால் என்பவர் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு பேரவை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கான இலட்சினையும் வெளியிடப்பட்டுள்ளது. 

பதவிக்காக அல்ல.. தமிழக மக்களின் உரிமைக்காக என்ற வாசகத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ராஜகோபால், பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட உள்ளதாக கூறினார்.  இந்த இயக்கம் திரிஷாவின் ஒப்புதலுடன் தொடங்கபட்டதா என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.