☰
×

‘Dream Olympics 2036’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்

 

சென்னையில் தமிழக வீரர்களுக்கான பாராட்டு விழாவில் ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036’ திட்டத்தை  தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்.

ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் விஜய் கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தார். 
20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 46வது செஸ் ஒலிம்பியாட் 2026 போட்டிகளில் பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகளுக்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் விஜய் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

ஆசிய விளையாட்டில் தடகள பிரிவில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் வென்ற வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு, 1 கோடியே 55 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி முதலமைச்சர் விஜய் கௌரவித்தார். அத்துடன் சென்னையில் தமிழக வீரர்களுக்கான பாராட்டு விழாவில் ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036’ திட்டத்தை  தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய். 8 வயது முதலே வீரர்களை கண்டறிந்து, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வகையில் அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கும் வகையில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகள், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கான பாராட்டு விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.