இன்னும் 15 நாட்களில் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்! வெளியான சூப்பர் தகவல்
கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை டிசம்பர் 3வது வாரம் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், தமிழகத்தில் பல்வேறு கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் உயர் தொழில்நுட்ப சாதனங்களை வழங்க திட்டமிடப்பட்டு, முதல்கட்டமாக அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் கைக்கணினி (டேப்லெட்) அல்லது மடிக்கணினி (லேப்டாப்) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி, முதல் கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய எச்பி, டெல், ஏசர் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசுக்கு ஆணை வழங்கியுள்ளது. இதன்படி, கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை டிசம்பர்3வது வாரம் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தொடக்க விழா 19 அல்லது 20ம் தேதி நடத்த ஆலோசனை நடப்பட்டு வருகிறது. டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி என்று 3 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.