திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு... மலைப்பாதையில் பாறை சரிவு
Oct 19, 2025, 12:39 IST
திருப்பதி, திருமலையில் கடந்த நான்கு நாட்களாக மழை பெய்து வருவதால் திருமலை இரண்டாவது மலைப்பாதை சாலையில் மண்சரிவு ஏற்பட்டது.
மலைப்பாதை சாலையின் 9வது கிலோமீட்டரில் மண்ச்சரிவால் சாலையில் பாறைகள் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தேவஸ்தான பொறியியல் அதிகாரிகள் சரிந்த பாறைகளை அகற்றி வருகின்றனர். மலைப்பாதை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் பொறியியல் துறை அதிகாரிகள் ஜேசிபி மூலம் பாறைகளை அகற்றி போக்குவரத்து இடையூராக இருந்த பாறைகளை அகற்றி சரி செய்தனர். இருப்பினும் வாகன ஓட்டிகள் மலைப்பாதையில் செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர். தொடர்ந்து மழைக்காலம் என்பதால் பொறியியல் அதிகாரிகள் மலைப்பாதையில் சிறப்பு கண்காணிப்பில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.