×

மலை சாலையை ஸ்தம்பிக்க வைத்த மண் சரிவு- தேனியில் பரபரப்பு

 

பெய்து வரும் தொடர்மழை காரணமாக போடி மெட்டு மலைச்சாலையில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

தேனி மாவட்டம் தமிழக கேரளாவை இணைக்கும் இயற்கை வளங்களுடன் கூடிய முக்கிய மாவட்டமாகும் மாவட்டத்தில் சுற்றி மேற்கு தொடர்ச்சி மலை வடக்கு மலை அமைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை வழியாக கேரள மாநிலம் செல்லும் போடிமெட்டு மலைச்சாலை அமைந்துள்ளது. நேற்று இரவு 8 மணிக்கு லேசான சாரல் மலையாக துவங்கி கன மழையாக மாறியது விடிய விடிய கனமழையின் காரணமாக போலி பகுதியில் 73 மில்லி மீட்டர் (  7. செ.மீட்டர் ) மழை பதிவாகினர். மழயின் காரணமாக போடியில் இருந்து போடி மெட்டு மலைச்சாலையில் 3, 8, 13 ஆகிய கொண்டு வளைவுகளில் ஆங்காங்கே சிறிய அளவில் மண் சரிவு ஏற்பட்டிருந்தன மேலும் 11-வது கொண்டு ஊசி வளைவில் சிறிய மரங்களுடன் நிலச்சரிவு ஏற்பட்டு கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டன உடனடியாக விரைந்து சென்ற மாவட்ட அதிகாரிகள் பாறைகளையும் மரத்தையும் அப்புறப்படுத்திய பின் பேருந்துகள்  சென்றன.

 

இந்நிலையில் தமிழகத்திலிருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு செல்லும் சாலையில் பூப்பாறை என்ற இடத்தில் சுமார் 40 அடி உயரம் உள்ள மரத்துடன் பாறைகள் உருண்டு முற்றிலும் போக்குவரத்து பாதிப்படைந்தன. தொடர்ந்து இரண்டு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்படைந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை துறையினரும் கேரளா வனத்துறையினர் விரைந்து சென்று மரங்களையும் பாறைகளையும் அப்புறப்படுத்தும் பணியில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து பாதிப்பு அடைந்த நிலையில் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் மூணாறு செல்ல முடியாமல் பூ பாறையில் அவதிப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் மலைச்சாலைகளில் ஆங்காங்கே பாறையில் உருண்டு விழும் அபாய நிலையில் உள்ளன. உடனடியாக தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் போர்க்கால அடிப்படையில் பொங்கி கொண்டிருக்கும் பாறைகளையும் மரங்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகளும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கையை விடுத்துள்ளனர்.