#BREAKING எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ரூ.8 கோடிக்கு மேல் ஊழல் மற்றும் இயற்கை வள கொள்ளையில் ஈடுபட்டதாக ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்பு துறையில் அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது.
2025 டிச,14-ம் தேதி திருவண்ணாமலையில் திமுக இளைஞர் அணி வடக்கு மண்டல மாநாடு நடந்தது. திருவண்ணாமலையில் மலப்பம்பாடி ஏரியில் சட்டவிரோதமாக மண் அள்ளியதன் மூலம் அரசுக்கு ரூ.8 கோடி இழப்பு என அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாநாட்டு திடலுக்காக மலப்பம்பாடி ஏரியில் விதிகளை மீறி மண் அள்ளியதாக எ.வ.வேலு மற்றும் அவரது மகன் குமரன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாட்டிற்காக ஏரிகளில் மண் எடுக்க 1 மீட்டருக்கு மேல் அனுமதி அளிக்க சட்டத்தில் இடமில்லை. அமைச்சராக இருந்த எ.வ.வேலு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக 3 முதல் 7 மீட்டர் ஆழம் வரை மண் திருட்டு அரங்கேறியுள்ளது. இதனால் ரூபாய் 8 கோடிக்கு மேல் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
மாநாடு நடந்த 124 ஏக்கர் நிலம் எ.வ.வேலு மகன் குமரனின் அருணை ப்ராடக்ட்ஸ் & சர்வீசஸ் பி.லிட் நிறுவனத்திற்கு சொந்தமானது. நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர் பெயரில் இருந்த 124 ஏக்கர் நிலம் குறைந்த விலைக்கு எ.வ.வேலு மகன் வாங்கியது தொடர்பாக விசாரிக்கவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.