☰
×

"நில அளவைக் கல்லா? தீபத்தூணா?" – உச்சநீதிமன்ற வாதத்திற்கு அண்ணாமலை பதிலடி!

‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் கே. அண்ணாமலை  தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில்,

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் நாள் விசாரணையின்போது மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூண் தீபம் ஏற்றுவதற்கானது அல்ல என்றும், அது ஒரு அளவீட்டுத் தூண் என்றும் வாதிட்டார்.

இதற்கு எதிர்வினையாற்றியுள்ள அண்ணாமலை, “டிசம்பர் 2025-ல், அப்போதைய திமுக ஆட்சியில் இருந்த இந்து சமய அறநிலையத்துறை, திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள ‘தீபத்தூண்’ சமணத் துறவிகளால் விளக்கேற்றுவதற்காக நிறுவப்பட்டது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தெரிவித்தது. இது, அந்தத் தூண் ஒரு ‘நில அளவைக் கல்’ (survey stone) என்று முன்னதாக அரசு கொண்டிருந்த நிலைப்பாட்டிற்கு முரணானதாகும். நேற்று, தற்போதைய அரசு, மதுரை மாவட்ட ஆட்சியர் வாயிலாக, உச்ச நீதிமன்றத்தில் இந்தத் தீபத்தூணை ஒரு ‘நில அளவைக் கல்’ என்று குறிப்பிட்டுள்ளது” என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், “ஒரே கட்டமைப்பைப் பொறுத்தவரை, ஒரு அரசு எவ்வாறு இரண்டு வெவ்வேறு நீதிமன்றங்களில் முற்றிலும் முரண்பட்ட நிலைப்பாடுகளை தெரிவிக்க முடியும்? இது, தமிழக அரசுக்கு (அன்று திமுகவாக இருந்தாலும் சரி, இன்று தற்போதைய அரசாக இருந்தாலும் சரி) இந்த விவகாரம் குறித்த புரிதலில் உள்ள தீவிரமான குறைபாடு அல்லது ஒட்டுமொத்த விஷயத்தையும் வேண்டுமென்றே தவறாகப் புரிந்துகொண்டிருப்பதையே காட்டுகிறது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கார்த்திகை தீபத் திருவிழா நெருங்கி வரும் நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. இரு தரப்பு வாதங்களையும் ஆவணங்களையும் ஆய்வு செய்து வரும் உச்சநீதிமன்றம் இவ்விவகாரத்தில் பிறப்பிக்கவுள்ள இடைக்கால உத்தரவைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

In Dec 2025, the HR&CE department under the erstwhile DMK govt told the Madurai bench of the Hon Madras High Court that the Deepathoon atop Thiruparankundram hill was placed by Jain monks to light lamps, contradicting its previous stand that the Deepathoon was a survey stone. Yesterday, the incumbent TVK govt thru the District Collector of Madurai, has called the Deepathoon a survey stone in the Honourable Supreme Court. How can a govt have entirely contradictory positions on the very same structure before two courts? This only reflects a serious lapse in the TN govt’s (Be it DMK then or TVK now) understanding or a deliberate misunderstanding of the subject as a whole.

— K.Annamalai (@annamalai_k) November 19, 2026