×

ரஜினியிடம் ஆதவ் அர்ஜூனா மன்னிப்பு கேட்க வேண்டும்- எல்.முருகன்

 

ரஜினிகாந்த் பற்றியும் அவரது அரசியல் பயண முடிவு குறித்து தவெக  மூத்த நிர்வாகியான திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் வாய்ப்புக்கு வந்தபடி பேசுவது கடும் கண்டனத்துக்குரியது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக எல்.முருகன் தனது எக்ஸ் தளத்தில், “திரு.ரஜினிகாந்த் பற்றி அவதூறாக பேசிய திரு. ஆதவ் அர்ஜூனாவுக்கு கண்டனம்..! ஜாதி, மதம், மொழியைக் கடந்து தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் அறிந்த நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர்.  அனைத்த தரப்பு மக்கள் மீது தீராத அன்பு கொண்ட அவர், தவறை சுட்டிக்காட்ட என்றுமே அவர்  தயங்கியதில்லை. தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பதும், மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை பயமின்றி எதிர்த்து நிற்பதையும் வழக்கமாக கொண்டவர். 

அரசியலுக்கு வந்து அவர் மக்கள் தொண்டாடற்ற வேண்டும் என அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று ரஜினிகாந்த அவர்கள், அரசியல் பாதையில் பயணம் செய்ய முடிவு செய்து பிறகு உடல்நலப் பிரச்சனையால் முடிவை கைவிட்டார். அவரை பற்றியும் அவரது அரசியல் பயண முடிவு குறித்து தவெக  மூத்த நிர்வாகியான திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் வாய்ப்புக்கு வந்தபடி பேசுவது கடும் கண்டனத்துக்குரியது. சொந்த அரசியலுக்காக தமிழக மக்களின் மனங்களை கொள்ளை கொண்ட மாபெரும் நடிகர் குறித்து திரு. ஆதவ் அர்ஜூனா பேசியுள்ளததை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.  திரு. ஆதவ் அர்ஜூனா அவர்களுக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களிடம் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்லார்.