சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல்- அப்பட்டமான பழிவாங்கல் செயல்: எல்.முருகன்
சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்திய கும்பல் மீது, காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது அப்பட்டமான பழிவாங்கல் செயல் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் தளத்தில், “திராவிட மாடல் என்ற பெயரில் தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் இந்த போலி திராவிட மாடல் திமுக அரசிற்கு எதிராக, அவர்கள் செய்யும் ஊழலையும், முறைகேடுகளையும் பொதுவெளியில் அம்பலப்படுத்துவோர் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடும் இந்த அராஜகப் போக்கை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த திமுக ஆட்சியில், அமைச்சர்களும், அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து நடத்தி வரும் ஊழலை, தொடர்ந்து தனது சவுக்கு மீடியா மூலமாக வெளிக்கொணர்ந்து வருகின்ற திரு. சவுக்கு சங்கர் அவர்களது இல்லத்தில், அவர் இல்லாத சமயம் பார்த்து அத்துமீறி நுழைந்திருக்கும் கும்பல் மீது, காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது அப்பட்டமான பழிவாங்கல் செயலாகும்.