சுவாமி ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் போதனைகளை ஏற்று நல்வழிப்படுவோம் - எல்.முருகன்!
Feb 18, 2024, 14:20 IST
சுவாமி ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களின் பிறந்தநாளான இன்று, அவருடைய போதனைகளை மானசீகமாக ஏற்று நல்வழிப்படுவோம் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாரதத்தின் தலைசிறந்த ஆன்மீகவாதி, சுவாமி ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். உலகம் போற்றும் ஆன்மீகவாதியாக திகழ்ந்த ஶ்ரீவிவேகானந்தரின் குருவாவார். அனைத்து மதங்களுமே இறைவனை அடைவதற்கான வழியையே போதிக்கின்றன என்பதை, தன்னுடைய அனுபவங்கள் மூலம் உலகிற்கு உணர்த்தியவர்.