×

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘பாரத ரத்னா’விருது வழங்கி கௌரவித்த பிரதமர் மோடிக்கு நன்றி - எல்.முருகன்

 

எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு, தேசத்தின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கௌரவித்துள்ள பாரதப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் பிறந்தவர், பாரதத்தின் சிறந்த வேளாண் விஞ்ஞானி, பசுமை புரட்சியின் தந்தை மரியாதைக்குரிய எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் மிகச் சிறந்த தாவர மரபியல் நிபுணராகவும், மனிதாபிமானியாகவும் திகழ்ந்தவர். நமது தேசத்தில் ‘பசுமைப் புரட்சி’ ஏற்படுத்தியதில் முக்கியமானவர். இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் வங்காள தேசத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது, பாரத மக்களுக்கான உணவுத் தேவையை உறுதி செய்யும் நோக்கில் தன் வாழ்வை வேளாண் துறைக்கு அர்ப்பணித்தார்.