அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள் - எல்.முருகன்!
Nov 12, 2023, 10:00 IST
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எல்.முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மங்களகரமான இந்த தீபாவளி பண்டிகை மக்கள் உள்ளங்களில் உள்ள துன்பங்களை அகற்றி, அனைவரின் இல்லங்களிலும் தீப ஒளியால் மகிழ்ச்சி பரவ வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன். அனைவருக்கும் எனது இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.