×

அனைத்து வகையிலும் திறனற்ற ஆட்சி நடத்தி வரும் திமுக - எல்.முருகன் விமர்சனம்!

 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, சமூகநீதி மற்றும் அரசாங்க நிர்வாகம் என்று அனைத்து வகையிலும் திறனற்ற ஆட்சி நடத்தி வரும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

தமிழக பாஜகவின் மதுரை மாவட்ட OBC அணியைச் சேர்ந்த திரு.சக்திவேல் அவர்கள், நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். இந்த சமயத்தில், அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.