×

ரஜினி படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி... குஷ்பு சொன்ன காரணம்

 

‘ராயன்’ படத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டது பற்றி பலரைப் போலவே எனக்கும் சில சந்தேகங்கள் இருப்பதாக நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

அண்மையில் நடந்த நேர்காணலில் பேசிய நடிகை குஷ்பு, “ஏதோ ஒரு காரணத்தால் சுந்தர்.சி ‘தலைவர் 173’ படத்திலிருந்து விலகினார். அதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஒரு இயக்குநருக்கு எந்தப் படத்தை இயக்க வேண்டும், எந்தப் படத்தை இயக்கக் கூடாது என்பதை முடிவு செய்யும் உரிமை இருக்கிறது. சுந்தர்.சி இந்தப் படத்தை இயக்கப் போவதில்லை என்ற தகவலை கமல்ஹாசன் சாருக்கு தொலைபேசி மூலம் நான்தான் தெரிவித்து பேசினேன். ‘ராயன்’ படத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டது பற்றி பலரைப் போலவே எனக்கும் சில சந்தேகங்கள் இருக்கின்றன. சில நேரங்களில் தேசிய விருது பெற்ற சில படங்களை விட, ஒடியா மொழியில் வெளியாகும் சில திரைப்படங்கள் மிகவும் சிறப்பாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது” என்றார்.