×

நல்லகண்ணு கல்வி பயின்ற குமரகுருபரர் சுவாமிகள் பள்ளிக்கு நாளை விடுமுறை

 

நல்லகண்ணுவின் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் அவர் கல்வி பயின்ற குமரகுருபரர் சுவாமிகள் பள்ளிக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டத்தை பூர்வீகமாக கொண்ட மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்கள் இன்று சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.  இதை அடுத்து ஸ்ரீவைகுண்டமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் அவர் ஆரம்பக் கல்வி பயின்ற ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் தொடக்கப்பள்ளியில் இன்று அவரது புகைப்படத்திற்கு மாலை அணிந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அவருக்கு புகழஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவருக்கு வீரவணக்கம் தெரிவிக்கப்பட்டது. 

அவரது மறைவை முன்னிட்டு நாளைய தினம் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். இதைப் போன்று ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் நாளை விடுமுறை விடப்படுவதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.