×

#BREAKING தனியார் மயமாகும் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்!

 

நாட்டின் இரண்டாவது ஏவுதளத்திற்காக தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டது.  கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தத் திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டினார்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமையும் ராக்கெட் ஏவுதளம் தனியார் மயமாகிறது. குலசேகரப்பட்டினத்தில் ரூ.986 கோடியில் ஏவுதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் குலசேகரப்பட்டினத்தில் அமையும் ஏவுதளத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் பணிகளை ஒன்றிய அரசு தொடங்கியது. 2,233 ஏக்கரில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகளை ஒன்றிய அரசின் விண்வெளித்துறை மேற்கொண்டுவருகிறது. ராக்கெட் ஏவுதளத்தை தனியாரிடம் வழங்க ஒன்றிய அரசின் இன் - ஸ்பேஸ் நிறுவனம் டெண்டர் கோரியது. நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் தனியாருக்கு வழங்கப்பட இருப்பதால் விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இஸ்ரோ விஞ்ஞானிகளின் எதிர்ப்புகளையும் மீறி, குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தின் இயக்கம், பராமரிப்பு பணியை தனியாருக்கு அளிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கான அலுவலக கட்டடப் பணிகள், ராக்கெட் லாஞ்ச் சர்வீஸ் பில்டிங், இஸ்ரோ லாஞ்ச் காம்ப்ளக்ஸ், ராக்கெட் லாஞ்சிங் பேட் போன்ற பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.