×

குவியும் பாராட்டுக்கள்..! வாகன விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த தவெக MLA..! 

 

பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகன விபத்தில் படுகாயமடைந்த நபரை தனது காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற தவெக எம்.எல்.ஏ. முகுந்தன் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர், எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானார். இதில் பலத்த காயமடைந்த அந்த இளைஞர், சாலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடியபடி கிடந்துள்ளார்.அந்தச் சமயத்தில், அவ்வழியாக தனது காரில் வந்த தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ. முகுந்தன், இதை பார்த்ததும் உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தினார்.

சற்று நேரமும் தாமதிக்காமல், காயமடைந்த இளைஞரை மீட்டுத் தனது சொந்த காரிலேயே ஏற்றினார். தொடர்ந்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று அவரை சேர்த்தார். விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உடனடியாக முதலுதவி கிடைக்க செய்து, அவரது உயிரை காப்பாற்ற துரிதமாக செயல்பட்ட எம்.எல்.ஏ. முகுந்தனின் இந்த மனிதநேய செயலை பார்த்து, அங்கிருந்த பொதுமக்களும் மருத்துவமனை ஊழியர்களும் அவரை நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கிருஷ்ணகிரி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், இருசக்கர வாகன விபத்தில் படுகாயமடைந்த நபரை தனது காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற தவெக எம்.எல்.ஏ. முகுந்தன்#Krishnagiri | #TVK | #MLA | #Accident | #PolimerNews pic.twitter.com/cw9x3L40dX

— Polimer News (@polimernews) July 21, 2026