மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் உதவுங்கள் - கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்
Dec 4, 2023, 13:15 IST
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் தங்களால் முயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள பதிவில், என் உயிரினும் மேலான தேசிய தோழர்களுக்கு வணக்கம். மிச்சாங் புயலின் தாக்கத்தால் தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் தங்கள் பகுதியில் மக்கள் பாதுகாப்பாக உள்ளார்களா என்பதை உறுதிசெய்ய வேண்டுகிறேன். அவர்களுக்கு தேவையான உதவிகளை உங்களால் முயன்ற வரை செய்ய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.