×

அமித்ஷாவை பார்த்து பயப்பட அவர் என்ன தீவிரவாதியா?அழகிரி பதிலடி!

அமித்ஷாவை பார்த்த பயப்பட அவர் என்ன கையில் ஏகே 47 துப்பாக்கி வைத்துள்ளாரா? என்று கே. எஸ். அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். வருகின்ற 21ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார் என தமிழக பாஜக மாநில தலைவர் எல். முருகன் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அமித்ஷாவின் வருகை பாஜகவினருக்கு உத்வேகத்தை அளிக்கும். எதிர்கட்சிகளுக்கு பயத்தை கொடுக்கும். தமிழகத்திற்கு வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க
 

அமித்ஷாவை பார்த்த பயப்பட அவர் என்ன கையில் ஏகே 47 துப்பாக்கி வைத்துள்ளாரா? என்று கே. எஸ். அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

வருகின்ற 21ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார் என தமிழக பாஜக மாநில தலைவர் எல். முருகன் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அமித்ஷாவின் வருகை பாஜகவினருக்கு உத்வேகத்தை அளிக்கும். எதிர்கட்சிகளுக்கு பயத்தை கொடுக்கும். தமிழகத்திற்கு வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளோம். அவர் வேல் யாத்திரையில் கலந்து கொள்ள மாட்டார். அத்துடன் அரசு மற்றும் பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால் முதல்வரை சந்திக்க வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்தார். குறிப்பாக அமித்ஷாவின் தமிழக வருகை எதிர்க்கட்சிகளுக்கு பயம் அளிக்கும் என்ற கூற்றுக்கு பலரும் எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, ‘அமித்ஷாவை பார்த்து பயப்பட அவர் என்ன தீவிரவாதியா?அவர் என்ன கையில் ஏகே 47 துப்பாக்கியுடன் வருவாரா? ஜனநாயக நாட்டில் யாரை பார்த்தும் யாரும் பயப்பட தேவை இல்லை . முக்கியமாக தமிழ்மண்ணில் அமித்ஷாவை பார்த்து யாரும் பயப்பட மாட்டார்கள். முருகன் தொடர்ந்து கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்’ என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் 2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 10 இடங்களில் 9 வெற்றிபெற்றது எனவே 2021 தேர்தலிலும் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். இதை தான் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு பாட்டி காலத்தில் நடந்தவற்றையெல்லாம் நினைவுபடுத்துவது சரியல்ல என்று தெரிவித்துள்ளார்.