“பதவி இல்லை என்றால் உயிரா போகப் போகிறது?”- கிருஷ்ணசாமி கேள்வி
Jun 28, 2026, 17:41 IST
தமிழ்நாட்டிற்கு தொடர்பு இல்லாத ஒரு தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக நியமித்தது தவறானது என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, “தமிழ்நாட்டிற்கு தொடர்பு இல்லாத ஒரு தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக நியமித்தது தவறானது. நாகரிகத்துக்கு உதாரணமாக இருந்த தமிழ்நாடு அரசியல், தற்போது கேலிக்கூத்தாக உள்ளது. எந்த அரசியல்வாதிகளும் கொள்கை கோட்பாட்டோடு இல்லை. பதவி இல்லை என்றால் உயிரா போக போகிறது? தேர்தல் முடிந்து 2 மாதங்கள் கூட ஆகாமல் பதவிக்காக அணி மாறுவது ஏற்கத்தக்கது அல்ல. நாகரீக அரசியலை சொந்தம் கொண்டாடிய தமிழ்நாடு இன்று கேலிக்கூத்தாக மாறியுள்ளது” என விமர்சித்தார்.