×

சவுக்கு சங்கர் அம்பலப்படுத்திய ஊழல்- தமிழகமெங்கும் பட்டியல் சாதியினருக்கான நிதியில் பல ஆயிரம் கோடி மோசடி: கிருஷ்ணசாமி

 

சென்னை மட்டுமல்லாமல், தமிழகமெங்கும் துப்புறவு தொழிலாளர்களின் பெயரில் நூற்றுக்கணக்கான கோடிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டுகிறார்.   

சவுக்குமீடியா என்ற பெயரில் யுடியூப்சேனல் நடத்திவரும் பிரபல ஊடகவியலாளர் சவுக்கு சங்கர், துப்புரவு தொழிலாளர்களுக்கு வாகனம் வாங்கி தருவதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் துப்புரவு தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஏமாற்றி கொள்ளையடித்தாகவும், செல்வப்பெருந்தகையும், ரவிக்குமார் நாராயணன் என்பவரும் சேர்ந்துகொண்டு துப்புரவு பணியாளர்களுக்கு சேரவேண்டிய 230 வாகனங்களை தங்களுக்கு தெரிந்தவர்கள் பேரில் பதிவு செய்து ஏமாற்றியதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து  சவுக்குசங்கர் வீட்டில்  சில ரவுடிகள் துப்புரவு பணியாளர்கள் வேடத்தில் பட்டப்பகலில் வீட்டில் பின்பக்ககதவை உடைத்து உள்ளே நுழைந்து வீட்டில் இருந்து பொருட்களை அடித்து உடைத்து சூறையாடிவிட்டு வீடுமுழுவதும் மனிதமலத்தை அள்ளி வீசி சென்றனர்.