கு.பா. கிருஷ்ணனுக்கு புதிய பொறுப்பு! முதல்வர் விஜய் அதிரடி
May 22, 2026, 19:19 IST
'தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக' கு.பா. கிருஷ்ணனை நியமனம் செய்து முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழை எளிய மக்களின் வாழ்விடங்களின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் குடியிருப்புகளை உருவாக்குதல், உறைவிடங்களில் மறுகுடியமர்வு செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் இன்று (22.05.2026) தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக திரு.கு.பா. கிருஷ்ணன் அவர்களை நியமனம் செய்து ஆணையிட்டுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.