தேர்தல் பிரச்சாரத்திற்கு ராகுல் வராதது ஏன்?- கிரிஷ் சோடங்கர் விளக்கம்
உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் த.வெ.க பக்கம் நிற்பார்கள் என விஜய் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு, உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் எப்போதுமே காங்கிரஸ் கட்சியின் பக்கம் தான் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 28 தொகுதிகளுக்கான மேலிட பார்வையாளர்களின் ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை மேலிட பொறுப்பாளர்கள் கிரிஷ் சோடங்கர், முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 2026 சட்டமன்ற தேர்தல் காங்கிரஸ் கட்சியின் தாய்க்கு தாயான கட்சி என்ற தலைப்பில் கொள்கை முழங்க பிரச்சார பாடல் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அடுத்த இரண்டு மூன்று நாட்களில் காங்கிரஸ் கட்சியில் தேசிய தலைவர்கள் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்வது குறித்த பட்டியல் வெளியாகும். உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் த.வெ.க பக்கம் நிற்பார்கள் என விஜய் கூறியிருக்கிறார். உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் எப்போதுமே காங்கிரஸ் கட்சியின் பக்கம் தான் நிற்பார்கள். திமுக காங்கிரஸ் கூட்டணியில் ராகுல் அதிருப்தி என்ற கருத்து தவறானது , பொய்யை பரப்புகின்றனர். திமுக தரப்பில் பிரச்சாரத்திற்கு ராகுல் காந்தியை அழைத்ததாகவும் ஆனால் ராகுல் காந்தி அலுவலகம் அதை நிராகரித்ததாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை, நாடாளுமன்றம் நடைபெறுவதால், நேரமின்மை காரணமாக ராகுல் காந்தி தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க முடியவில்லை, ஆனாலும் விரைவில் நேரம் ஒதுக்கி பிரச்சாரம் மேற்கொள்வார். தேர்தல் பிரச்சார அட்டவணை ஓரிரு நாட்களில் வெளியாகும்” என்றார்.