×

எடப்பாடி பழனிசாமியை சந்திக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரம் கேட்கவில்லை- கே.பி. முனுசாமி

 

இபிஎஸ் தரப்பில் நேரம் கொடுக்கவில்லை என அமைச்சர் நிர்மல்குமார் கூறியிருந்த நிலையில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, “இபிஎஸ்-யை சந்திக்க நேரம் கேட்டதாக அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் கூறுவது முற்றிலும் தவறானது. எடப்பாடி பழனிசாமியை சந்திக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் தரப்பிலோ, தவெக அலுவலகத்திலிருந்தோ யாரும் நேரம் கேட்கவில்லை. திருச்சி நன்றி அறிவிப்பு கூட்டத்தில் டயலாக்கை 18 நிமிடம் பேசி முடித்துள்ளார். முதலமைச்சர் விஜய்க்கு சொந்த சிந்தனை இல்லை, கொடுத்ததை படித்து விட்டார். சினிமா பாணியில் பேசுவதால் முன்னாடி உள்ளவர்கள் கை தட்டலாம். முகம் கழிப்பவர்கள் எத்தனை பேர் என்பதை உணர வேண்டும். உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் முதலமைச்சர் விஜய் அவர்களே..” என்றார்.