×

நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக கு.ப.கிருஷ்ணன் நியமனம்..! 

 

திருச்சி மாவட்டம் குழுமணியை சேர்ந்தவர் கு.ப.கிருஷ்ணன். அதிமுக சார்பில் 1991ம் ஆண்டு ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வேளாண் அமைச்சரானார். பின்னர் 2001ல் தமிழர் பூமி என்ற கட்சியை தொடங்கி, அதன் பிறகு தேமுதிகவில் இணைந்தார்.

மீண்டும் அதிமுகவில் ஐக்கியமான கிருஷ்ணன் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ் அணியில் இணைந்தார். கடந்த ஜனவரியில் சென்னை மாமல்லபுரத்தில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்து அண்மையில் முடிந்த சட்டசபை தேர்தலில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.இரு தொகுதிகளில் வென்ற விஜய், முதல்வராகும் முன்பு திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். 

இந்த தொகுதியில் யாரை வேட்பாளராக போட்டியிட வைப்பது என்று பேச்சுகள் வந்த போது நிலையில், கு.ப.கிருஷ்ணனுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று பேச்சுகள் பரவலாக எழுந்தன.இந்நிலையில் யாரும் எதிர்பாராத தருணமாக, நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக கு.ப.கிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். இதன்மூலம் திருச்சி கிழக்கில் அவர் போட்டியில்லை என்பது உறுதியாகி உள்ளது.