கோவில்பட்டி கடலைமிட்டாய் விலை உயர்வு
Aug 25, 2026, 17:52 IST
கோவில்பட்டி கடலை மிட்டாய் 25% விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.
தூத்துக்குடி கோவில்பட்டி கடலைமிட்டாய் விலை 25% உயர்த்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். அதன்படி கோவில்பட்டியில் ஒரு கிலோ கடலை மிட்டாய் 20 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. வெல்லம், கடலை பருப்பு, ஏலக்காய், பேக்கிங் கவர்களின் விலை உயர்வால் கடலை மிட்டாய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி செலவு காரணமாகவும் விலையை உயர்த்தியதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்டுள்ளனர். ஒரு கிலோ ரூ.220க்கு விற்பனை செய்யப்பட்ட கடலைமிட்டாய் தற்போது ரூ.270க்கு விற்பனை செய்யப்படுகிறது.