‘காவல் உதவி’ செயலியை மாணவிகள் உடனே பதிவிறக்கம் செய்க- அமைச்சர் கோவி.செழியன்
Dec 27, 2024, 21:15 IST
மாணவிகள் காவல் உதவி செயலியை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதை அனைத்துக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் கோவி. செழியன் தனது எக்ஸ் தளத்தில், “பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதற்கான அனைத்து நடவடிக்களையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஆபத்துக் காலங்களில் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள உதவும் ‘காவல் உதவி’ (Kaaval Uthavi) செயலியை அனைத்துப் பெண்களும் குறிப்பாக மாணவிகள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.