அதிமுக ஐடி விங் தலைவர் பொறுப்பிலிருந்து கோவை சத்யன் விடுவிப்பு
அதிமுக ஐடி விங் தலைவர் பொறுப்பிலிருந்து கோவை சத்யன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பொறுப்பிலிருந்து கோவை சத்யன் விடுவிக்கப்பட்டு இன்று முதல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஊடகவியல் செயலாளர் பொறுப்பு வழங்கப்படுகிறது என அதிமுக தலைமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அரசியல் நிர்வாகியும், அதிமுக செய்தித் தொடர்பாளருமாக அறியப்படுவர் கோவை சத்யன். கட்சியின் சார்பில் ஊடகங்களில் பேசுவது, அரசியல் விமர்சனங்களுக்கு பதிலளிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளார். 2018-ஆம் ஆண்டிலேயே அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராக India Today நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டார். கட்சியின் அரசியல் நிலைப்பாடுகள், தேர்தல் கூட்டணிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் குறித்த கருத்துகளைத் தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் செய்தியாளர் சந்திப்புகளில் எடுத்துரைப்பதன் மூலம் இவர் கவனம் பெற்றவர். 2024 டிசம்பரில் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. தி.மு.க. அரசின் செயல்பாடுகள், பா.ஜ.க.வுடனான கூட்டணி, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை உள்ளிட்ட விஷயங்களில் அ.தி.மு.க.வின் கருத்துகளை முன்வைத்துள்ளார். 2025 ஜனவரியில், கோவை சத்யன் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போவதாகச் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. ஆனால், அவர் அதனை மறுத்து விளக்கமளித்ததாகச் செய்திகள் வெளியாகின.
.