☰
×

கொளத்தூர் மக்கள் ஷாக்..! வி.எஸ்.பாபு மரணத்தில் சந்தேகம் எனக்கூறி சமூக ஆர்வலர் புகார்..! 

 

கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, சமூக ஆர்வலர் ஜி. தேவராஜன் ஆன்லைன் மூலம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி.எஸ். பாபு நேற்று காலமானதைத் தொடர்ந்து இந்தப் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட செம்பியம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் எழுத்தரான இவர்தான், வி.எஸ்.பாபுவின் உடல்நலம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்களை பொதுவெளியில் வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று ரிட் மனுத்தாக்கல் செய்தார்.

வி.எஸ்.பாபுவின் மரணத்தின் பின்னணியில் ஏதேனும் சதிச் செயல் நடந்திருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவித்து, காவல்துறையில் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.

மேலும், வி.எஸ்.பாபுவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான அனைத்து மருத்துவ ஆவணங்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் தேவராஜன் தனது புகாரில் வலியுறுத்தியுள்ளார்.