கொளத்தூர் MLA வி.எஸ்.பாபு குணமடைந்து வருகிறார்- மருத்துவமனை அறிக்கை
Sep 10, 2026, 18:51 IST
கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மூத்திணறல் காரணமாக இன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படடார். அவரிடம் முதலமைச்சர் விஜய் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார். சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவை அமைச்சர் மரிய வில்சன் சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆதரவு சிகிச்சையின் மூலம் அவர் குணமடைந்து வருவதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.