×

12 பேரை காவு வாங்கிய கொடைக்கானல் ஐந்து வீடு அருவி! நிரந்தரத் தடை விதிக்க முடிவு

 

கொடைக்கானலில் 12 பேரை இதுவரை காவு வாங்கிய ஐந்து வீடு அருவிக்கு செல்லும் வழி பெயர் பலகை மற்றும் அதனுடைய பெயர் பலகைகள் அகற்றப்பட்டன. 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ளது அஞ்சு அஞ்சு வீடு என்ற பகுதி இந்த பகுதியில் ஐந்து அருவி என்று அருவி உள்ளது. கொடைக்கானலில் இருந்து  பழனிக்கு நீர் வழித்தடமாக செல்லக்கூடிய அனைத்து தண்ணீரும் ஐந்தருவி வழியாகத்தான் செல்லும். மிகவும் அபாயகரமான இந்த அறிவிப்பு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை 12 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆறு நாட்களுக்கு முன்னர் பொள்ளாச்சியில் இருந்து நண்பர்களுடன் வந்த நந்தகுமார்(21) என்ற மருத்துவ மாணவர் ஐந்தருவியில் குளிக்க சென்றுள்ளார் அப்போது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த நந்தகுமார் அருவியின் சூழலில் சிக்கிக் கொண்டு உயிரிழந்தார். அவரை நான்கு நாட்கள் கொடைக்கானல் தீயணைப்புத் துறையினர் அந்தப் பகுதியில் உள்ள கிராம மக்கள் என அனைவரும் அறிவியில் தேடிய பிறகு நான்கு நாட்களுக்குப் பின்னர் அவரது உடல் கிடைத்த நிலையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஐந்தருவிக்கு செல்லக்கூடிய பகுதிகளில் தடுப்பு கம்பிகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து சுற்றுலா அலுவலகம் முன்னர் போராட்டம் நடைபெற்ற நிலையில், நேற்று அப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டனர். பின்னர் தடுப்பு கம்பிகள் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்த நிலையில் இன்று ஐந்தருவிக்கு செல்லும் வழி , ஐந்தருவியின் பெயர் பலகை என ஐந்தருவிக்கு செல்லக்கூடிய அனைத்து இடங்களிலும் இருந்து ஐந்தருவி பெயர் பலகை  நீக்கப்பட்டது. மேலும் உயிரிழப்பைத் தடுக்க அருவிக்குச் செல்ல நிரந்தரத் தடை விதிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.