#BREAKING மு.க.ஸ்டாலினுடன் கே.என்.நேரு, ஓபிஎஸ் ஆலோசனை
சட்டப்பேரவையில் நடைபெற்ற விவகாரம் குறித்து சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் மு.க.ஸ்டாலினுடன் கே.என்.நேரு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்திவருகின்றனர்.
சட்டசபையில் பேசிய தமிழக முதல்வர் ஜோசப் விஜய் திமுக மீது அமலாக்கத்துறை வைத்த பல குற்றச்சாட்டுகள் பற்றி பேசியிருந்தார். கடந்த திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் திமுக ஊழல் செய்திருக்கிறது கட்சி நிதி என்கிற பெயரில் பணம் உதயநிதிக்கும், மு.க ஸ்டாலினுக்கும் சென்றிருக்கிறது என அமலாக்கத்துறை கூறியிருப்பதாக அவர் சட்டசபையில் கூறினார். இதையடுத்து அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இது தொடர்பாக தங்களை பேச அனுமதிக்க வேண்டும் எனவும் உதயநிதி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனார். ஆனால் அந்த கோரிக்கையை அவர் ஏற்கவில்லை. எனவே சபாநாயகரின் இருக்கைக்கு முன் கீழே அமர்ந்து அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் நடைபெற்ற விவகாரம் குறித்து சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் மு.க.ஸ்டாலினுடன் கே.என்.நேரு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்திவருகின்றனர்.