×

தமிழகம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரம்- அமைச்சர் விளக்கம்

 

மதுரை விமான நிலையத்தில்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “இந்த வடகிழக்கு பருவமழை பொறுத்தவரை தமிழக அரசு எதையும் சந்திக்க கூடிய அளவிற்கு தயார் நிலையில் இருக்கின்றது. 256 பகுதிகளில் மீட்பு படையினரை பிரித்து அனுப்பப்பட்டுள்ள தயார் நிலையில் உள்ளது. மற்ற பகுதிகளில் சேத விவரங்களை கேட்டு இருக்கின்றோம். தமிழகம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தொடர்ந்து தமிழக அரசு அகற்றி வந்து கொண்டிருக்கிறது.  வடகிழக்கு பருவமழையால்  பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு கொடுப்பதற்கு தேவைப்படக்கூடிய நிதி தமிழக அரசிடம் உள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் குடியிருப்பவர்களை அனாதை ஆக்கி விடாமல் அவர்களுடைய நிலை குறித்து நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. 

விமான நிலைய ஓய்வறையில் கூட தமிழக மக்கள் நலன் குறித்து குறிப்பாக வடகிழக்கு பருவமழை குறித்து தான் முதலமைச்சர் எங்களிடம் கேட்டுக் கொண்டார். பாஜக அண்ணாமலை குறித்த கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்ல தயாராக இல்லை” எனக் கூறினார்.