"செங்கோட்டையன் தவெகவில் தாத்தா கதாபாத்திரத்தில் நடிக்க சென்றுள்ளார்"- கே.கே.செல்வம் விமர்சனம்
கோபி தொகுதியில் போட்டியிட அதிமுக வாய்ப்பு வழங்கினால் செங்கோட்டைய னை எதிர்த்து போட்டியிட்டு 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன் என செங்கோட்டையன் அண்ணன் மகன் செல்வம் பேட்டியளித்துள்ளார்.
செங்கோட்டையன் அண்ணன் மகன் செல்வம் சமீபத்தில் அதிமுகவில் இணைந்த நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதிமுக அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கியுள்ளார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பேசிய அவர், கோபிசெட்டிபாளையத்தில் போட்டியிட வாய்ப்பு கேட்கிறேன். 1980ல் தனது தாத்தா திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் போது கோபி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெற்றார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட செங்கோட்டையன் வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது அதே கோபி தொகுதியில் செங்கோட்டையன் மீண்டும் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன். 60 ஆயிரம் வாக்கு வித்தியாசத்திங் தோற்கடிப்பேன்.
தமிழக வெற்றிக் கழகம் சினிமா படப்பிடிப்பாக ஈரோடு கூட்டம் நடைபெற்றது. இதில் ஹீரோ கேரக்டரில் விஜய்யும், தாத்தா கேரக்டரில் செங்கோட்டையனும் நடிக்கின்றனர். இந்த படப்பிடிப்பு தேர்தல் வாக்கு எண்ணிக்கை அன்று முடிவுக்கு வரும். ஈரோட்டில் தவெகவிற்கு கூடியது ரசிகர்கள், ரசிகைகள் கூட்டம் தான். கவுன்சிலர் தேர்தலில் கூட போட்டியிடாத விஜய், தவெகவினர் ஈரோட்டை தவெகவின் கோட்டையாக மாற்றுவோம் என கூறுவது வேடிக்கையாகவும், நகைப்பாகவும் உள்ளது” என்றார்.