ரூ.1 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து எடுக்கப்படும் கிட்னி - நாமக்கல்லில் பகீர்
நாமக்கல் மாவட்டத்தில் ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து விசைத்தறி கூலித் தொழிலாளிகளிடம் கும்பல் ஒன்று கிட்னி எடுக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் ஏழைத்தொழிலாளர்களை குறிவைத்து அவர்களின் வறுமையை பயன்படுத்தி 2 முதல் 3 லட்ச ரூபாய் தருவதாக கூறி புரோக்கர்கள் கிட்னியை எடுக்க சம்மதிக்க வைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.3 லட்சம் வரை விலைபேசி எடுக்கப்படும் கிட்னி ரூ.50 லட்சம் வரை தனியார் மருத்துவமனைக்கு விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் கிட்னியை எடுத்து விற்றுத் தர பல புரோக்கர்கள் செயல்படுவதாகவும், சேலம், திருச்சி, பெரம்பலூர், கோயம்புத்தூரில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று கிட்னி எடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளிபாளையத்தில் சத்யா நகரில் ஏழைப் பெண்களிடம் கிட்னி எடுக்கப்பட்டது உறுதியான நிலையில் வெளியாகும் பகீர் தகவல்கள் கூறிய தொகையை தராமல் புரோக்கர்கள் மோசடியில் ஈடுபடுவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனையடுத்து பள்ளிப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது, எப்போது பார்த்தாலும் இதுபோன்று ஏதாவது ஒன்று நடக்கும் என அலட்சியமாக கூறுகிறார்.